தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் நான்காவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், இயக்குனர் ஏ.எல்.விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக கங்கனா ரணாவத்,தலைவி படத்தில் ஜெயலலிதாவின் தோற்றத்தில் அவர் இருக்கும் சில புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உள்ள அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.