Advertisment

ரயில்வே பயணிகளுக்கு டிக்கெட் விற்ற ஜெயலலிதா பட நடிகை!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் படம் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கின்றார். இவர் முன்னதாக தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்னும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Advertisment

kangana ranaut

இந்நிலையில் கங்கனா ரனாவத் நடித்த பங்கா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக படத்தின் புரொமோஷனுக்காக சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில்வே நிலையத்தில் டிக்கெட் விற்கும் ஊழியராக சிறிது நேரம் பணியாற்றினார். பங்கா படத்தில் கபடி வீராங்கணை திருமணமான பின்னர் கபடியைவிட்டுவிட்டு ரயில்வேவில் டிக்கெட் விற்பவராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, பேருந்துகள், ரயில்களை எரிப்பதற்கு உரிமை கொடுத்தது யார்? சுதந்திரத்துக்கு முன்பு நாம் அடிமைப்பட்டு கிடந்த காலம் இதுவல்ல, மக்களாட்சி சட்டம் கொண்ட ஜனநாயகத்தில் வன்முறை ஏற்புடையது அல்ல, இன்றைய ஜனநாயகத்தில் தலைவர் ஒருவரை நாம் தான் தேர்வு செய்கிறோம் ஜப்பான், சீனாவில் இருந்து நம் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை” என்று தனது குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

Bollywood Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe