Advertisment

"நடிகைகளைப் பார்க்கும் விதத்தை மாற்றியவர்..." ஜெயலலிதாவிற்கு மலரஞ்சலி செலுத்திய கங்கனா ரணாவத்!

Kangana Ranaut

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் நான்காவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத், இயக்குனர் ஏ.எல்.விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இயக்கி வரும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், அவரது நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக கங்கனா ரணாவத், படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். மேலும், அந்தப் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "உலகம் நடிகைகளைப் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில், மலரஞ்சலி செலுத்தப் பெருமைப்படுகிறேன். பெண்மையைப் போற்றுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe