/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/498_6.jpg)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழில் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கங்கனா போர்ஷனின் படப்பிடிப்பு முடிந்து மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர். இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்.
இந்நிலையில் மற்றொரு தமிழ் படத்திலும் நடிக்க கங்கனா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிப்பதாகவும் மாதவன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக மாதவனும், கங்கனாவும் 'தனு வெட்ஸ் மனு' என்ற இந்தி படத்தில் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)