Advertisment

“அவர் இல்லையென்றால் சூரியன் கூட உதிக்காது...” - கங்கனா ரனாவத் உருக்கம்

Kangana Ranaut Meltdown about sathguru

கோவையில் ஈஷா யோகா மைய அறக்கட்டளையை நிறுவி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சீடர்களைக் கொண்டுள்ளவர் ஜக்கி வாசுதேவ். ஈஷாவை தொடங்கிய நாள் தொட்டு இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளில் ஜக்கி வாசுதேவும் அவரது ஈஷா மையமும் சிக்கி வருகிறது. அதேபோல, ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி, பிரதமர், தொழில் துறை, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வது வழக்கம்.

Advertisment

இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி கடும் தலைவலி காரணமாக சத்குரு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Advertisment

இதனையடுத்து, டாக்டர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்ட அவர், மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கை சரிசெய்ய, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவர் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபடி ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது.

Kangana Ranaut Meltdown about sathguru

இந்த நிலையில், சத்குரு விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “இன்றுசத்குருஐசியூ படுக்கையில் படுத்திருப்பதைப் பார்த்தபோது, திடீரென்று அவருடைய இருப்பின் மரணத் தன்மை என்னைத் தாக்கியது. இதற்கு முன் அவர் நம்மைப் போலவே எலும்பும், ரத்தமும், சதையும் உள்ள நபர் என்று எனக்குத் தோன்றவில்லை. கடவுள் நிலைகுலைந்து போனதை உணர்ந்தேன்.பூமி மாறியதை உணர்ந்தேன்.வானம் என்னை கைவிட்டதாக உணர்ந்தேன். இந்த யதார்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

எனது வலியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் நன்றாக இருந்தால் நல்லது.அப்படியில்லை என்றால், சூரியன் உதிக்காது;பூமி நகராது. இதைப் பற்றி நான் அறிந்ததிலிருந்து நான் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன். அந்த வேதனையில் சத்குரு ஜி, பிரமாண்டமான சிவராத்திரி நிகழ்வை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல், எந்த ஒரு கூட்டத்தையும் அல்லது சந்திப்பையும் கூட தவிர்க்கவில்லை. விரைவில் குணமடையுங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

jaggi vasudev Kangana Ranaut
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe