கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல்

Kangana Ranaut has dengue fever

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துகாய்ச்சலோடு கங்கனா படப்பிடிப்பு தளத்தில் தன் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.இதனிடையே கங்கனா விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Subscribe