அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு சமீபத்தில் வழங்கியது.

Advertisment

kangana

இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அபரஜித்தா அயோத்தியா என்று பாலிவுட்டில் படம் ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கங்கனா ரணாவத் தயாரிக்கிறார்.

Advertisment

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தான் நடிக்கிறார். சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.