Advertisment

கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி’ - வெளியான ரிலீஸ் அப்டேட்

 kangana ranaut Emergency release update

கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'எமர்ஜென்சி'. இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன்பு கங்கான ரனாவத், தலைவி படத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.

Advertisment

இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்தது. அதே சமயத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாஜ.க சார்பில் கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தற்போது அவரின் 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் ‘வரலாற்றில் அவள் எழுதிய இருண்ட அத்தியாயம்’ என்ற தலைப்பில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இறுதியில் ‘இந்தியாதான் இந்திரா... இந்திராதான் இந்தியா’ என கங்கனா பேசுவது போல் ட்ரைலர் முடிகிறது. மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

Kangana Ranaut emergency
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe