Kangana Ranaut Drunk in Singer Jasbir Jassi

நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவார். மேலும் அதற்காக கடும் கண்டனத்தையும் எதிர்கொண்டு வருகிறார். அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் அண்மையில் நடந்த பேரணியில், பஞ்சாப் குறித்து பேசியிருந்ததற்கு பஞ்சாப் பாடகர் ஜாசியால் கடும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளார். கங்கனா பேசியதாவது, “அண்டை மாநிலம் பஞ்சாப் போதைப்பொருளால் நிரம்பியுள்ளது. அங்கு இருக்கும் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இருக்கின்றனர். ஆனால் இமாச்சலப் பிரதேசம் அதற்கு முற்றிலும் மாறுபட்டது. இமாச்சலப் பிரதேச இளைஞர்கள் பஞ்சாப் மக்களால் பாதிக்கப்பட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

இவரது கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த பஞ்சாப் பாடகர் ஜஸ்பிர் ஜாஸி, கங்கனா குறித்து அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளிக்கையில், “கங்கனா பஞ்சாபை குறிவைத்துப் பேசியுள்ளதால் நான் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அவர் ஒரு முறை டெல்லியில் என்னுடைய காரில் என்னுடன் மது அருந்தினார். அப்போது அவரது தோழியும் உடன் இருந்தார். கங்கனாவால் நிலையாக நிற்கமுடியவில்லை. அந்தளவிற்கு மது அருந்தினார். அதோடு போதைப் பொருளும் உட்கொண்டிருந்தார். அவர் போதைப் பொருள் உட்கொண்ட அளவிற்கு வேறு யாரும் உட்கொள்வார்களா என்பது எனக்கு தெரியவில்லை. பஞ்சாபை பற்றி அவர் பேசுவதை நிறுத்தவில்லை என்றால் அவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கும்” என்றார்.

மேலும், “கங்கனா பேசுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் ஒரு பைத்தியம். இப்படிப்பட்ட முட்டாள்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுவது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாகும்” என்றார்.