Advertisment

“பிள்ளைகள் உடலுறவு வைத்துக்கொள்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்”- பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை...

தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும் பாலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்னும் அளவிற்கு பிரபலமாக இருப்பவர். ராணி லக்‌ஷ்மிபாய் கதாபாத்திரத்தில் இவர் நடித்த படம் இந்த வருட தொடக்கத்தில் ரிலீஸானது. மேலும் இரண்டு ஹிந்தி படங்கள் இந்த வருட இறுதிக்குள் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஏ.எல். விஜய் எடுக்க இருக்கும் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர்தான் ஜெவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

Advertisment

kangana ranaut

இந்நிலையில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் செக்ஸ் மிகவும் முக்கியமானது, அதை அறுவெறுக்க விஷயம்போல் கருதாமல் பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும் என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

alt="336" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="48e2643f-896a-4e86-a85b-491804817b27" height="159" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x90_2.jpg" width="357" />

Advertisment

அந்த பேட்டியில், “ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எந்தவித கோணத்திலும் செக்ஸ் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உங்களுக்கு உடலுறவு வைத்துக்கொள்ள விருப்பம் இருந்தால் வைத்துக்கொள்ளுங்கள். ஆவேசப்பட வேண்டாம். முன்னர் எல்லாம் சீக்கிரமே திருமணம் செய்துக்கொள்ள சொல்லுவார்கள். ஏன் என்றால் அப்போதுதான் உங்களின் எண்ணம் ஒருவரின் மேலே இருக்கும். தங்களின் அடுத்த தலைமுறையினர் உடலுறவு வைத்துக்கொள்வதால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். அதேபோல பிள்ளைகள் ரெஸ்பான்ஸிபிலாக இருக்க வேண்டும். என்னுடைய பெற்றோர்கள் நான் உடலுறவில் ஆக்டிவாக இருப்பது தெரிந்து பயந்துவிட்டார்கள். பிள்ளைகள் உடலுறவு வைத்துக்கொள்வதைபெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். கங்கனா ரனாவத்தின் பேச்சை எதிர்த்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

controversy kanganaranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe