Skip to main content

“பிள்ளைகள் உடலுறவு வைத்துக்கொள்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்”- பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை...

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும் பாலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்னும் அளவிற்கு பிரபலமாக இருப்பவர். ராணி லக்‌ஷ்மிபாய் கதாபாத்திரத்தில் இவர் நடித்த படம் இந்த வருட தொடக்கத்தில் ரிலீஸானது. மேலும் இரண்டு ஹிந்தி படங்கள் இந்த வருட இறுதிக்குள் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஏ.எல். விஜய் எடுக்க இருக்கும் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர்தான் ஜெவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
 

kangana ranaut

 

 

இந்நிலையில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் செக்ஸ் மிகவும் முக்கியமானது, அதை அறுவெறுக்க விஷயம்போல் கருதாமல் பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும் என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

336


அந்த பேட்டியில், “ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எந்தவித கோணத்திலும் செக்ஸ் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உங்களுக்கு உடலுறவு வைத்துக்கொள்ள விருப்பம் இருந்தால் வைத்துக்கொள்ளுங்கள். ஆவேசப்பட வேண்டாம். முன்னர் எல்லாம் சீக்கிரமே திருமணம் செய்துக்கொள்ள சொல்லுவார்கள். ஏன் என்றால் அப்போதுதான் உங்களின் எண்ணம் ஒருவரின் மேலே இருக்கும். தங்களின் அடுத்த தலைமுறையினர் உடலுறவு வைத்துக்கொள்வதால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். அதேபோல பிள்ளைகள் ரெஸ்பான்ஸிபிலாக இருக்க வேண்டும். என்னுடைய பெற்றோர்கள் நான் உடலுறவில் ஆக்டிவாக இருப்பது தெரிந்து பயந்துவிட்டார்கள்.  பிள்ளைகள் உடலுறவு வைத்துக்கொள்வதைபெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். கங்கனா ரனாவத்தின் பேச்சை எதிர்த்து பலரும் விமர்சித்து வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காந்தி குறித்து சர்ச்சை பேச்சு; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Tamil Nadu Governor RN Ravi's explanation on Controversy about Gandhi

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கடந்த 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்தேன் என்று கடந்த 3-4 நாட்களில் சில ஊடகங்கள் தவறான எண்ணத்தை உருவாக்க முயல்கின்றன. உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது. நான் மகாத்மா காந்தியை மிகவும் மதிக்கிறேன், அவருடைய போதனைகள் என் வாழ்க்கையின் இலட்சியங்களாக இருக்கின்றன. ஜனவரி 23, 2024 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாளில் நான் பேசியதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் என் பேச்சிற்கு ஒரு திருப்பம் கொடுத்தன. நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை எனது உரையில் விரிவாகக் கூற முயன்றேன்.

1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் வேகத்தையும், செயல்முறையையும் துரிதப்படுத்தியது பிப்ரவரி 1946 இல் ராயல் இந்தியன் கடற்படை மற்றும் விமானப்படையின் கிளர்ச்சிகள் ஆகிய இரண்டும் நேதாஜியால் ஈர்க்கப்பட்டவை என்று நான் ஒரு கருத்தை முன்வைக்க முயற்சித்தேன். பிப்ரவரி 1946 இல் கிளர்ச்சிகள் நடந்தன, அடுத்த மாதம் மார்ச் 1946 இல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதாகப் பகிரங்கமாக அறிவித்து, தங்கள் நேர்மையை வெளிப்படுத்தவும், கிளர்ச்சியடைந்த இந்தியர்களின் உணர்வுகளைத் தணிக்கவும், கிளர்ச்சிகளைத் தடுக்கவும் அரசியலமைப்பு சபையை அமைத்தனர். கடற்படை மற்றும் விமானப்படை கிளர்ச்சிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய தேசிய இராணுவத்தின் போர் உட்பட நேதாஜியின் புரட்சிகர நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டன. ஆகஸ்ட், 1942 இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, வலிமையை இழந்தது.

இந்தியப் பிரிவினைக்கான முஸ்லீம் லீக்கின் தீவிரமான வலியுறுத்தல் காரணமாக தேசிய சுதந்திர இயக்கத்தில் ஏற்பட்ட உள் மோதல்கள், உள் மோதல்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த காங்கிரஸ் தலைவர்களின் ஆற்றல்கள் ஆங்கிலேயர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆங்கிலேயர்கள் இன்னும் சில ஆண்டுகள் இந்தியாவை ஆண்டிருக்கலாம். ஆனால் நேதாஜியின் ஆயுதப் புரட்சி, இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மூலம் அவை தவிடுபொடியாக்கின. நான் கூறியது முதன்மை ஆவணங்களின் அடிப்படையிலான உண்மைகள். மகாத்மா காந்தியின் போதனைகள் என் வாழ்வின் வழிகாட்டியாக விளங்கிய அவரை நான் அவமதிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

ஆளுநர் நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலை. இட்ட உத்தரவால் சர்ச்சை; துணை வேந்தர் விளக்கம்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Anna University for Governor Program. Controversy by Order

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா நேற்று (23-01-24) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். 

இவ்விழாவின் பார்வையாளர்களாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆளுநர் விழாவில் அதிக மாணவர்களைப் பங்கேற்க செய்யும் வகையில் விழா அரங்கிலேயே வருகைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரங்கிற்கு உள்ளே சென்று விழாவிற்கு வரும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப் பதிவு கொடுக்கப்படும் படி அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. 

இந்நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “400 மாணவர்கள் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு 2 மணி நேரப் பாட வகுப்புகளை ரத்து செய்து வரவழைத்தோம். மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை எடுத்துச் சொல்ல இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதில் எந்த தவறும் இல்லை. இடம் அதிகம் இருந்திருந்தால் அனைத்து மாணவர்களையும் அழைத்து பங்கேற்க செய்திருப்போம். இதுபோன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். 

வருகைப் பதிவை நிகழ்ச்சியில் எடுத்தால் தான், அவர்கள் கலந்து கொண்டது உறுதி செய்யப்படும். இல்லையென்றால், இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் வெளியே எங்கேயாவது சென்று விடுவார்கள். இதனால் தான், நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் வருகைப்பதிவு என்று கூறப்பட்டது. தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் எந்த தவறும் இல்லை. இதுவும் ஒரு கற்பித்தல் நிகழ்ச்சி தான்” என்று கூறினார்.