/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/13_84.jpg)
17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தின்முதன்மைக் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் இணைந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாகபடக்குழு வெளியிட்டிருக்கும்போஸ்டர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தமிழில் ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் அறிமுகமான கங்கனா கடைசியாக தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட 'தலைவி' படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது 'சந்திரமுகி 2' படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தில் நடித்தும் இயக்கியும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)