kangana ranaut in chandramukhi 2

Advertisment

17 வருடங்கள் கழித்து'சந்திரமுகி 2' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தமிழில் ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் அறிமுகமான கங்கனா கடைசியாக தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கனா ரணாவத்தற்போது 'எமர்ஜென்சி' படத்தில் நடித்தும் இயக்கியும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.