Advertisment

"அவர்களின் இந்தி உச்சரிப்பு எரிச்சலை உண்டாக்குகிறது" - கங்கனா ரணாவத்

Kangana Ranaut is annoyed by english speak kids who speak hindi

Advertisment

இத்தாலி நாடாளுமன்றத்தில்ஆங்கிலோமேனியாவைச் சமாளிப்பதற்கும் அந்நாட்டின் கலாச்சாரப் பாதுகாப்புக்காகவும்அலுவலகப் பயன்பாட்டில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளைத்தடை செய்து ஒரு மசோதாகொண்டுவரப்பட்டது. இந்த மசோதா குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த ஒருவர் அது குறித்த ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து, "அந்த மசோதா இங்கேயும் கொண்டுவரப்பட வேண்டும். ஹரியானாவின்குருகிராமில் இருக்கும் குழந்தைகள் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். இந்தியைகொஞ்சம் கொஞ்சம் தான் அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. மற்றபடி இந்தியைப் பேச மறந்துவிட்டனர்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா ரணாவத், "ட்ரோல் செய்வதை நான் வரவேற்கிறேன். ஆனால் நேர்மையாகச் சொல்கிறேன். ஆங்கிலம் பேசும் குழந்தைகள்இந்தி பேசும்போது சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டாம் தர பிரிட்டிஷ் உச்சரிப்பு முறையிலான அவர்களின் இந்தி உச்சரிப்பு எரிச்சலை உண்டாக்குகிறது.அதே சமயம் இந்தி மட்டும் பேசக்கூடிய குழந்தைகள் சமஸ்கிருதத்தை பேசும்போது நன்றாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

hindi Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe