குடியுரிமை திருத்தம் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் பலர் அதை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒருசில இடங்களில் போலீஸ் போராட்டக்காரர்களை லத்தியாலும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலைத்து வருகின்றனர். ஒருசில இடங்களில் பொது சொத்துக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஒருசில வன்முறையாளர்கள் செயல்படுகின்றனர்.

kangana ranaut

Advertisment

Advertisment

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த பங்கா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கங்கனா குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதில், பேருந்துகள், “ரயில்களை எரிப்பதற்கு உரிமை கொடுத்தது யார்? சுதந்திரத்துக்கு முன்பு நாம் அடிமைப்பட்டு கிடந்த காலம் இதுவல்ல, மக்களாட்சி சட்டம் கொண்ட ஜனநாயகத்தில் வன்முறை ஏற்புடையது அல்ல, இன்றைய ஜனநாயகத்தில் தலைவர் ஒருவரை நாம் தான் தேர்வு செய்கிறோம் ஜப்பான், சீனாவில் இருந்து நம் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.