Published on 26/08/2020 | Edited on 26/08/2020

கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்போது இவரது மரணம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. சுஷாந்தின் காதலி ரியா மீது தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை ரியா மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நார்காட்டிக்ஸ் பீரோவுக்கு உதவ மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ட்வீட் செய்துள்ளார் கங்கனா ரனாவத்.
மேலும் அதில், "என்னுடைய தொழிலை மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கையையும் இதற்காக ரிஸ்க் வைத்திருக்கிறேன். சுஷாந்த் சிங்கிற்கு எதோ ரகசியம் தெரிந்திருக்கிறது. அதனால்தான் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.