Advertisment

"அரசியலமைப்புக்கு எதிரானது" - சர்ச்சையை தூசு தட்டிய கங்கனா

Kangana Ranaut about the kerala story

Advertisment

விபுல்அம்ருத்லால்ஷா தயாரிப்பில்சுதிப்தோசென்இயக்கத்தில்அதாசர்மா, சித்திஇட்னானிஉள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளாஸ்டோரி. இப்படத்தின்டீசர்வெளியானதுமுதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் விசாரணையின் போதுபடத்திற்குக்கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

பின்பு பல எதிர்ப்புகளைத்தாண்டி கடந்த 5 ஆம்தேதி இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமேரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள்அதிகரித்து வர மல்டிப்ளெக்ஸ்திரையரங்கங்கள்தானாக முன்வந்து தி கேரளஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம்என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இதை எதிர்த்து படக்குழு தரப்பு நீதிமன்றம் சென்ற நிலையில், இந்த விவகாரம்தொடர்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகள் விளக்கமளிக்க வேண்டிநோட்டீஸ் அனுப்பியது. பின்பு தமிழ்நாடு அரசு சார்பில்மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்துதமிழ்நாடு அரசு மறைமுகமாகத்தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டுபடத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கிடநீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும்மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடையையும்நீக்கியது.இப்படி படம்வெளியாவதற்குமுன்பு, பின்பு ஏகப்பட்டசர்ச்சைகளைக்கிளப்பிய இந்த படத்தை பாஜக மற்றும் வலது சாரிகள் தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். இப்படம் தற்போது வரை ரூ.200 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இப்படம் குறித்து பல திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கங்கனா கூறியது, "தி கேரளா ஸ்டோரி’ போன்ற படம் உருவாகும் போது மக்களின் குறை நிவர்த்தி செய்யப்படுகிறது. இதுபோன்ற படங்கள் திரைத்துறைக்கு உதவும்.கேரளாவைச் சேர்ந்த பெண்கள் எப்படி மதம் மாற்றப்படுகிறார்கள் என்பதைச் சித்தரிப்பதால், அரசியல் வட்டாரத்தில் இப்படம்பேசு பொருளாகமாறியுள்ளது. இப்படத்துக்கு சில மாநிலங்கள் விதித்துள்ள தடை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் (CBFC) அனுமதி பெற்ற ஒரு படத்தை தடை செய்வது அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும். அவைசரியல்ல" என்றுள்ளார்.

the kerala story Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe