/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kangana-ranaut_17.jpg)
இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று (23.03.2021) வெளியான படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற படத்தின் இந்தி ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கங்கனா ரணாவத், "தங்களுடைய உரையாடலில் தெளிவாகவும் நேர்மையாகவும் இருக்கும் நபர்களை மக்களுக்குப் பிடிப்பதில்லை. சில நேரங்களில் கடுமையான எதிர்வினைகள் எனக்கு கிடைக்கின்றன. அரசியல் உலகம் எனக்கு முற்றிலும் தெரியாதது. நாட்டைப் பற்றி, தேசியம் பற்றி, விவசாயிகள் பற்றிநான் பேசினாலே அரசியல் ஆசை வந்துவிட்டது என்கின்றனர். அதுபோல எதுவுமில்லை. ஒரு சாதாரண குடிமகளாக இருந்து இந்தக் கருத்துகளைத் தெரிவிக்கிறேன். எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)