/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/277_4.jpg)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். மேலும், தமிழில் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு வரும் கங்கனா தொடர்ந்து மத்திய அரசுக்கும் மோடிக்கும் ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் கரண் ஜோகர் தயாரிப்பில் வெளியாகியுள்ள 'செல்பி' படம் படுதோல்வி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கரண் ஜோஹரின் படம் 10 லட்சம் கூட வசூலிக்கவில்லை.ஆனால், ஊடகங்கள் அவரது பெயரையோ அல்லது தயாரிப்பின் பெயரையோ குறிப்பிடுவதில்லை. இந்த படத்திற்கும் எனக்கும் தொடர்பில்லாத போது படம் தோல்வியடைந்ததற்கு காரணம் நான் என்று கூறுகிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். செல்பி படம்பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும்.
பாலிவுட் திரையுலகத்தில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக கங்கனா ரணாவத் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார். இதன் காரணமாக பாய்காட் கலாச்சாரம் பரவலாக பேசப்பட்டது.அதன் தாக்கம் காரணமாக நிறைய வாரிசு நடிகர்களின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக கரண் ஜோகர் தயாரித்த 'லைகர்', 'பிரம்மாஸ்திரா' உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன.
அக்ஷய் குமாருக்கும் அவரது கடைசி படங்களான 'சாம்ராட் பிருத்விராஜ்', 'ரக்ஷா பந்தன்', 'கட்டபுத்தல்லி', 'ராம் சேது' ஆகியவை படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)