/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kangana-biden-im_1.jpg)
பிரபலஇந்தி நடிகை கங்கனாரனாவத். தமிழில்ஜெயம் ரவியோடு ‘தாம் தூம்’ படத்தில் நடித்துள்ளார். சக நடிகர்சுஷாந்தின் மரணத்தை தொடர்ந்து, இவர் தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சயை கிளப்பியது. மேலும் இவருக்கும், மஹாராஷ்டிரா அரசுக்கும்மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில்,தற்போது அமெரிக்க துணை அதிபர் தேர்தலில்வெற்றிபெற்றுள்ள கமலாஹாரிஸை வாழ்த்தி அவர் பதிவிட்டுள்ள ஒரு ட்விட், சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில்"ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை எல்லாவற்றையும் மறந்துவிடும் 'கஜினி'பைடன்பற்றி உறுதியாக தெரியவில்லை. அவருக்குசெலுத்தப்பட்ட மருந்துகளால், அவர் ஒரு வருடத்திற்கு மேல் தாங்கமாட்டார். எனவே கமலாஹாரிஸ்தான் ஆட்சியை நடத்த போகிறார் எனகூறியிருக்கிறார். மேலும் அவர் "ஒரு பெண் உயரும்போது, அவர் மற்ற பெண்களுக்கு வழிகாட்டுவார்" எனகூறியுள்ளார்.
இதற்குதங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நெட்டிசன்கள்,ஒருவரின்உடல்நிலையை பற்றி இவ்வாறுவிமர்சிக்கக்கூடாது எனகங்கனாரனாவத்தை கண்டித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)