சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படமான 'முனி 4 காஞ்சனா 3' படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19ம் தேதி 'முனி 4 காஞ்சனா 3' படம் உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் கோவை சரளா மற்றும் ஸ்ரீமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.