kanchana 4 shoot start

Advertisment

காஞ்சனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்தடுத்து பாகங்களை இயக்கி நடித்து வந்தார் ராகவா லாரன்ஸ். கடைசியாக காஞ்சனா பாகம் 3 வெளியான நிலையில் தற்போது நான்காம் பாகம் உருவாகுவதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்பு சமீபத்தில் இப்படத்தில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் ஏதேனும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.