Published on 13/11/2018 | Edited on 13/11/2018

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 'காஞ்சனா 2' படம் மாபெரும் வெற்றிபெற்றது. நாயகனாக படத்தை இயக்கி நடித்த ராகவா லாரன்சுடன், கோவை சரளா, டாப்சி, நித்யாமேனன் ஆகியோர் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான லாரன்ஸ், ஓவியா நடிப்பில் 'முனி 4 காஞ்சனா 3' படம் பிரமாண்டமாக உருவாகி வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர முழுமையாக முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் தற்போது ஆரம்பித்துள்ளது. மேலும் படம் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.