Published on 11/03/2019 | Edited on 11/03/2019

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான 'முனி 4 காஞ்சனா 3' படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19ம் தேதி 'முனி 4 காஞ்சனா 3' படம் உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவியா, வேதிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் கோவை சரளா மற்றும் ஸ்ரீமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படம் தேர்தல் முடிந்த மறு நாள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.