style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
'முனி' நான்காவது பாகமான 'காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் 'முனி' முதல் பாகத்தில் படத்தில் நாயகியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்த படக்குழு இப்படத்தை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக முன்னர் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது படம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.