Advertisment

சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா,மகன் பாசம்... கவனம் ஈர்க்கும் 'கணம்' பட டீசர் 

kanam movie teaser goes viral

அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி நடிகர் சர்வானாந்த்நடிக்கும் கணம்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசைமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும்வெளியாக உள்ளது.

Advertisment

ad

இப்படம் குறித்து இயக்குநர் ஸ்ரீ கார்த்தி கூறுகையில், ". "அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் தான் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கியுள்ளேன். சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு, தற்போது சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் இரண்டு மொழிகளின் படப்பிடிப்பு செலவு உள்ளிட்டவைகளால் பெரும் பொருட்செலவு கொண்ட படமாக மாறியிருக்கிறது.இப்படத்தில் அம்மா வேடத்தில் நடிகை அமலா நடித்துள்ளார்.இந்தக் கதையை அவரை மனதில் வைத்தே எழுதினேன். 25 வருடங்களாக நடிக்காமல் இருந்தவர், இந்தக் கதையைக் கேட்டவுடன் ஒப்புக் கொண்டார். படம் பார்ப்பவர்கள் அனைவரது மனதிலும், அவரவர்களின் நிஜ அம்மாவை நினைவு கூர்வார்கள். 'கணம்' படத்தின் சிறப்பே அம்மா பாசத்துக்குள் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்திருப்பது தான். இந்தப் படம் அம்மாவை இழந்தவர்களுக்கு மீண்டும் அம்மாவை ஞாபகப்படுத்தும். படம் முடிந்ததும் அம்மாவிடம் பேசத் தோன்றும். அம்மாவை நேரில் பார்த்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கத் தோன்றும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று யூடியூப் தளத்தில் 4 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

sr prabhu kanam movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe