style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சிவகார்த்திகேயன் தயாரித்து நடிகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் 'கனா'. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து படத்தை வரும் டிசம்பரில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.