Advertisment

மீண்டும் ரசிகர்களைக் கவரவரும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரிஸ்!

Kanaa Kaanum Kaalangal

Advertisment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 90-ஸ் கிட்ஸ் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்த சீரியல்களில் ’கனா காணும் காலங்கள்’ முக்கியமானது. பள்ளி பருவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் என தற்போதுவரை நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளன. முதல் இரு சீசன்கள் பள்ளிக்காலத்தை மையமாக வைத்து வெளியாகிய நிலையில், அடுத்த இரு சீசன்கள் கல்லூரி காலத்தை மையமாக வைத்து வெளியாகின. இந்த சீரியலில் நடித்த பாண்டி, பாலா சரவணன், கவின், டெம்பிள் மங்கி விஜய், இர்ஃபான், யுதன் பாலாஜி உள்ளிட்ட பலரும் பின்னாட்களில் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்கள்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e0a322a5-a1b7-4f22-b7e8-3f76b0583428" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_19.jpg" />

இந்த நிலையில், கனா காணும் காலங்கள் சீரியலின் அடுத்த சீசன் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த நான்கு சீசன்கள் விஜய் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், இந்த சீசன் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

vijay tv
இதையும் படியுங்கள்
Subscribe