“மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும்” - கமல்ஹாசன் நம்பிக்கை

kamalhassan wishes minister udhayanidhi stalin

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை 'கிடாரி' படம் மூலம் கவனம் ஈர்த்த முருகன் பிரசாத் இயக்கவுள்ளதாகக்கூறப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் எனவும், தனது நடிப்பில் உருவாகும் மாமன்னன் படமே தனது கடைசிப்படமாக வெளியாகும் எனத்தெரிவித்துள்ளார். மேலும், கமல்ஹாசன்தயாரிப்பில் உருவாகும் படத்தில், தான் நடிக்கவில்லை எனத்தெரிவித்த அவர், முதலில் கமல்ஹாசன்தான் வாழ்த்துதெரிவித்தார் எனக் கூறியுள்ளார். அதோடு ‘மாரி செல்வராஜ் ஆசைப்பட்டது போல் மாமன்னன்தான் எனது கடைசிப்படம்’ எனப் பேசியுள்ளார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும்மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த், "தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" எனத்தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ACTOR KAMAL HASSHAN Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe