ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படம் எடுத்து முடித்து ஒரு வருடமான நிலையில் சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் தேதி தாமதாகியது. இப்படத்திலிருந்து ஐம்பது கட் செய்தபின்னே சென்சார் குழு ரிலீஸுக்கு அனுமதி அளித்தது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ஜிப்ஸி படத்தினை திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

Advertisment

kamal hassan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குனர் ராஜு முருகனையும் நடிகர் ஜீவாவையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இப்படத்தை பார்த்த பின்னர் கமல்ஹாசன் ட்விட்டரில், “மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்குத் தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ‘ஜிப்ஸி’ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.