Advertisment

“அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே”- ரசிகருக்கு கமல்ஹாசன் வாழ்த்து! 

kamal hassan

1989ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான படம் 'அபூர்வ சகோதரர்கள்'. இந்தப் படம் எவ்வளவு ஹிட் அடித்ததோ அதே அளவிற்கு இப்படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. கமல் ரசிகர்கள் கமலுக்காக எதேனும் விழா எடுக்கிறார்கள் என்றால் 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ..' என்னும் பாடல் அந்த விழாவில் முதன்மையாக இருக்கும் என்பது பலரும் அறிந்ததே.

Advertisment

சில நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலை கமல் மாதிரியே ட்ரெட்மில்லில் நடனமாடி நடிகர் அஸ்வின் குமார் பதிவிட்ட பதிவு ஒன்று வைரலானது. டிரெட்மில் ஓடுகையில் அதில் ஓட்டபயிற்சி செய்வதே கடினமான ஒன்று என்றபோது, அதில் கமல்போல அசால்ட்டாக நடனமாடினார் என்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Advertisment

அரசியல், நலப்பணி எனத் தற்போதைய சூழலில் பிஸியாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன், இந்த வைரல் வீடியோவை பகிர்ந்து ரசிகரை வாழ்த்தியுள்ளார். அதில், "நான் செய்த நல்வினைகள் என் ரசிகரைச் சென்றடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!" என்று தெரிவித்துள்ளார்.

actor kamal hassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe