இன்று நடிகர், மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர், கமல்ஹாசனின் பிறந்தநாள். ரசிகர்களும் தொண்டர்களும் மகிழ்ந்திருக்கும் வேளையில்மகிழ்ச்சியைரெட்டிப்பாகும் விதமாக வந்திருக்கிறது 'விக்ரம்' படத்தின்டீசர். ஒரு கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தின்டைட்டில்டீசர், வெளியாகி பார்த்தவர்களுக்கு கூஸ்பம்ப்ஸ்கொடுத்துக்கொண்டு இருக்கிறது. டீசரின் இறுதியில் இசை அப்படியே மாறி 1986இல் வெளியான கமலின்'விக்ரம்' படத்தின் இசையாக ஒலிப்பதுஒரு விதசிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
1986இல் அப்போது முன்னனி இயக்குனராக இருந்த ராஜசேகரின் இயக்கத்தில், கமல் - சுஜாதா எழுத்தில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் 'விக்ரம்'. அந்த காலகட்டத்திற்கு மிகவும் மாடர்னான உருவாக்கத்தை கொண்டிருந்தது. கமல் ரசிகர்களின் டாப் லிஸ்ட்டில் விக்ரமுக்கும் இடமிருக்கும். பொதுவாக, ஒரு நடிகரை நாயகனாகரசிக்கும்ரசிகர்களுக்கு, அவரை ஆக்ஷன் அவதாரத்தில் பார்ப்பதுமிகவும் விருப்பத்திற்குரிய விஷயம். அந்த வகையில்,80களிலும் 90களிலும் கமல்ஹாசனுக்குப் பல படங்கள்வெளிவந்தன. அதன் பின்னர் தனது பாதையைவேறு விதமாக மாற்றிக்கொண்ட கமல், ஒரு பெரிய முயற்சி - ஒரு காமெடி படம் என்ற கலவையில் படங்கள் கொடுத்தார். அந்த வரிசையில்ஆக்ஷன் - கமர்ஷியல் படங்கள்குறைவே.
2000க்குப் பிறகு 'ஆளவந்தான்', 'விருமாண்டி', 'வேட்டையாடு விளையாடு', 'விஸ்வரூபம்' ஆகிய வெகு சிலபடங்கள் மட்டுமே ரசிகர்கள் கொண்டாடும்ஆக்ஷன் தருணங்களை கொண்டிருந்தன. இந்நிலையில் இந்தியன் 2, லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு போன்றவை, இவ்வகையான கமல் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கின. அந்த மகிழ்ச்சிக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இருக்கிறது தற்போது வெளிவந்துள்ள 'விக்ரம்' டைட்டில்டீசர். கூர்மையான பார்வை, குறையாத ஸ்டைல் என1986 'விக்ரம்'படத்தின் கமலுக்குஎந்த வகையிலும் குறையாத கெத்துடன் இருக்கிறார் 2020 'விக்ரம்' கமல் என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
கமல் ரசிகரானகெளதம் மேனன்எடுத்த 'வேட்டையாடு விளையாடு' மிகச்சிறந்த ஓப்பனிங் சீனை கொண்டிருந்தது. இன்னொரு கமல் ரசிகரானலோகேஷின்விக்ரம், அது போல பல காட்சிகளை கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருமே கமலின் ‘சத்யா’ படத்தை மிகவும் ரசித்தவர்கள், அதை பார்த்து காப்பு அணிந்தவர்கள். அப்படிப்பட்டவர் இயக்கியுள்ள ’விக்ரம்’ டீசரில் அரசியல்வாதி, போலீஸ் எனபலரை அழைத்து விருந்து பரிமாறி 'ஆரம்பிக்கலாங்களா?' என்று கமல்கேட்பது அதிரடியையும் அரசியல் அர்த்தத்தையும் கொண்டிருக்கிறது.