/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_47.jpg)
தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளான இன்று (17.09.2022), தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பெரியாரின் சிலைக்கு பல அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனிடையே திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைதளபக்கத்தில் பெரியாரை நினைவு கூறும் வகையில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பெரியார் குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 17, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)