Skip to main content

"கலைஞரால் திறக்கப்பட்ட சிலை" - நினைவு கூறும் கமல்ஹாசன்

 

kamalhassan shared a photo with nethaji Statue unveiled by ex cm Kalaignar

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்தியன் தாத்தா கெட்டப்பில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த கமல்ஹாசன் புகைப்படம் வெளியாகி வைரலானது. 

 

'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் இந்தியன் தாத்தா கெட்டப்பில் நேதாஜி சிலைக்கு கீழ் இருக்கும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.   

 

மறைந்த முதலமைச்சர் கலைஞர், 1997ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நேதாஜி திருவுருவச்சிலையை இன்றைய தேதியில் (15.12.1997) திறந்து வைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.