Skip to main content

பாடல் வரிகளை வெளியிட்ட கமல்ஹாசன்!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே அடங்கிக்கிடக்கும் மக்களுக்கு இது ஒரு பெரும் பாதிப்பாகவும், அச்சமாகவும், சவாலாகவும் உள்ளது. இதனால் வீட்டில் அடங்கியிருக்கும் மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், பாஸிட்டிவிட்டியை கூட்டவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
 

 

 

kamalhassan


இந்த பாடலை ஜிப்ரான் இசையமைக்க கமலுடன் இணைந்து அனிருத், யுவன் ஷங்கர்ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலை திங்க் மியூசிக் நிறுவனம் தனது யூட்யூப் சேனலில் நாளை வெளியிடுகிறது. 
 


இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலின் வரிகளை வெளியிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; குழு அமைத்த கமல்ஹாசன்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Parliamentary elections approaching; Kamal Haasan announce Team

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்புக் குழு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'அது ஒரு கருவிதான்'-பணம் குறித்து கமல்ஹாசன் பேச்சு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

'It's a tool' - Kamal Haasan talks about money

 

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பணம் குறித்து உரையாற்றிய பேச்சு இணையத்தில்  வைரலாகி வருகிறது.

 

கமல்ஹாசன் பேசியதாவது, ''என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். மூச்சு இல்லாமல் 40 செகண்ட் அல்லது ஒரு நிமிடம் தாங்குவோம். தண்ணி இல்லாமல் ஆறு ஏலு நாட்கள் தாங்குவோம். சாப்பாடு இல்லாமல் பத்து நாட்கள் தாங்குவோம். அதைவிட பணம் எப்படி முக்கியமாக இருக்க முடியும். இதையெல்லாம் வாங்குவதற்கு அது ஒரு கருவி. ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தாடி வைக்க வேண்டுமா அல்லது மழிக்க வேண்டுமா என்பது உங்களுடைய இஷ்டம். அதை நீங்கள் பிளேடு கிட்டப் போய் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதுவெறும் கருவி தான். அதுவா சொல்லும் வேணாம் தாடிய கொஞ்சம் நீளமாகவே வச்சுக்கோ அல்லது முழுவதும் சவரம் பண்ணிக்க, இல்ல மீசை மட்டும் வச்சுக்க என பிளேடுக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவுதான் பணமும். அது பேசாமடந்தை.

 

நான் சினிமா நடிக்க வந்த பொழுது இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று பலர் இருந்தனர். முக்கியமாக என் ஏரிக்கரையில் தெரிந்த முதல் சூரியன் சிவாஜி. அதன் பிறகு தான் இப்படி ஒரு கேலக்ஸி இருக்கிறது என்றே தெரியும். அதற்கு காரணம் எனக்கு கோனார் நோட்ஸ் கொடுத்து பொழிப்புரை சொல்லி அனுப்பி வைத்தவர் சிவாஜி சார் தான். நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இன்னொரு சிவாஜி ஆகவேண்டும் என நான் நினைக்கவே இல்லை. இன்னொரு சிவாஜி வருவாரா என்று கூட கேட்கவில்லை'' என்றார்.