Advertisment

இளையராஜாவிற்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்

kamalhassan meets ilaiyaraaja regards bhavatharani passed away

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி கடந்த 25 ஆம் தேதி மாலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment

பின்பு விமானம் மூலம் இலங்கையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனியில் அவரின் தாயார் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா ஆகியோரின் மணிமண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே இளையராஜா குடும்பத்தாருக்கு நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். மேலும் ஆறுதலும் கூறினர். பவதாரணியின் சகோதரரும் இயக்குநருமான வெங்கட் பிரபு, பவதாரிணியுடன் அவர் எடுத்த கடைசி புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இளையராஜாவிற்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்குச் சென்று இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

Ilaiyaraaja ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe