kamalhassan feeling speech about Ramesh Sippy

அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ப்ராஜெக்ட் கே'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படம்அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 12 ஆம் தேதி (12.01.2024) பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்த நிலையில், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. படத்தின் இசைப் பணிகளை சந்தோஷ் நாராயணன் கவனிக்கிறார். இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சர்ப்ரைஸாக பசுபதி வருகிறார். மேலும் கமல் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவில்லை. படத்திற்கு 'கல்கி 2898 ஏடி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வீடியோ வெளியீடு அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் நடந்துள்ள நிலையில் அதற்காகக்கமல், பிரபாஸ், ராணா உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு கூடி இருக்கின்றனர். இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கமல், அமிதாப் பச்சனைப் பற்றி நிறையவிஷயங்களை நினைவு கூர்ந்தார்.

அதன் ஒரு பகுதியாக, "ஷோலே படத்தை நாஸ்டாலஜியாக நினைவு கூறும் பலருக்குநான் ஒன்றை சொல்கிறேன். அதில் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். ஷோலே படத்தைப் பார்த்த நாளன்று இரவு நான் தூங்கவே இல்லை. என்னை தூங்க விடாமல் செய்ததற்காக படத்தை முதலில் நான் வெறுத்தேன். படத்தின் இயக்குநரை இன்னும் அதிகமாக வெறுத்தேன். ஆனால்அந்தச் சிறந்த இயக்குநரோடுபணியாற்றகிடைத்தவாய்ப்பு பற்றி பின்நாளில் அவரிடமே சொன்னேன். ஒரு டெக்னீஷியனாக, அன்று இரவு என்னால் இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்துதூங்க முடியவில்லை என்பதையும் சொன்னேன். ஷோலேபோன்ற நிறைய படங்கள் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். அந்த மனிதர்என் படங்களை இது போன்ற பிரம்மாண்ட மேடையில்பாராட்டி பேசுவது என்பதுநான் உதவி இயக்குநராக இருந்த போது நினைத்துப் பார்க்காத ஒன்று" என்றார்.

Advertisment