Advertisment

'விக்ரம்' படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்!

kamalhassan celebrates birthday with vikram movie team

'மாஸ்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கிவருகிறார், இதில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Advertisment

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த 'விக்ரம்' படக்குழு, சென்னை தாம்பரத்தில் மூன்றாம் கட்ட படபிடிப்பை நடத்திவருகிறது. நடிகர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ஆம்தேதி தனது 67வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இந்நிலையில், தாம்பரத்தில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்ததால்'விக்ரம்' படக்குழு நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை நேற்று (01.11.2021) கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisment

சமீபத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூவரும் உள்ள போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளன்று 'விக்ரம்' படம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

kamalhassan lokesh kanagaraj vikram movie
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe