kamalhassan about vote

தேசிய வாக்காளர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியத் தேர்தல் ஆணையம் 14வது தேசிய வாக்காளர் தினத்தை இன்று கொண்டாடுகிறது. இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புதிய புரட்சி ஏற்படுத்துவோம் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது வாக்குகள் ஒவ்வொன்றும் தேசத்தின் மீதான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். இன்றுதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு வாக்களித்து ஒரு புதிய புரட்சி மற்றும் புதிய இந்தியாவைத் தூண்டும் தீப்பொறியாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஓட்டின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுப் பேசியுள்ளார்.

கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்த இரு படங்களும் வெளியாகும் பொழுது அது ஒரு அரசியல் மேடையாக மாறும் எனவும் அதில் செய்திகள் இருக்கின்றன எனவும் கடந்த பிறந்தநாளை முன்னிட்டு தனது கட்சி நிர்வாகிகளிடம் கமல் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment