ADVERTISEMENT

"அன்னைய்யா குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு" - கமல்ஹாசன் உருக்கம்!

02:01 PM Sep 25, 2020 | santhosh

ADVERTISEMENT

'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார். கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி உயிர்பிரிந்தது. இன்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி . சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...

ADVERTISEMENT

"அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்" என வீடியோ பதிவுடன் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT