/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamal-hassan_12.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தது. அதன்பின் திடீரென அவர் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று அறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து எஸ்.பி.பியின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர். மீண்டும் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அறிவித்தது. அவருடைய மகனான சரண், அடிக்கடி எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகரும் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் எஸ்.பி.பி குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா” என்று பதிவிட்டுள்ளார். எஸ்.பி.பி ஒரு மேடையில், தன்னை கமல்ஹாசன் அன்னைய்யா என்று உரிமையாகதான் அழைப்பார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)