kamalhassan about nagesh

இந்திய சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு மொழிகளில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நாகேஷ். குறிப்பாக இவரது காமெடி கதாபாத்திரங்கள் இன்றும் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கிறது. இவரது மறைவு தினமான இன்று, பலரும் அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவாக பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் கமல்ஹாசன், “நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை. கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர். காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்” என உருக்கமுடன் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

கமல்ஹாசனும் நாகேஷும் பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள் என ஏகப்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.