/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/59_21.jpg)
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்இந்தியன் 2 படப்பிடிப்பிலும், 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையேதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவு (23/11/2022) சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மருத்துவமனை நிர்வாகம் கமல்ஹாசன் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லேசான காய்ச்சல், இருமல் மற்றும் சளியின் காரணமாக மருத்துவமனையில் நேற்று (23.11.2022) அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் உடல் நிலை சீராக உள்ளது எனவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும்கூறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)