Advertisment

"பெண்கள் தொடாத துறையே இல்லை" - கமல்ஹாசன் வாழ்த்து

kamalhaasan womens day wishes

உலகம் முழுவதும் இன்று (08.03.2023) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துதெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், "பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், "மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள். வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள். ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள். கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும். உலக மகளிர் திருநாள் வாழ்த்து" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் சுதா கொங்கராவும் தனது சமூக வலைதள பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

ACTOR KAMAL HASSHAN Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe