kamalhaasan wishes udhayanidhi stalin

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து தடம், மீகாமன் ஆகிய படங்களைஇயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன்படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும்முடிந்து அடுத்த கட்ட பணியில் உள்ளது.

Advertisment

இப்படங்களை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அடுத்தாகராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பைஅண்மையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார். இதற்கு உதயநிதி ஸ்டாலின், "ராஜ்கமல் ப்லிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இதற்கு கமல்ஹாசன், "அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.