'இவன் கலை தாகம் போர் விலையாகும்' - புதிய பாடலை வெளியிட்ட 'விக்ரம்' படக்குழு

kamalhaasan vikram title track lyric video released

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி 'சந்தானம்' என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் 'அமர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் டைட்டில் ட்ராக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பட தலைப்பான விக்ரம் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார், அந்த கதாபாத்திரத்தை பற்றி விவரிக்கும் வகையில் இந்த லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் நாளை (03.06.2022) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor kamal hassan actor vijay sethupathi lokesh kanagaraj vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe