kamalhaasan VIKRAM movie Porkanda Singam release

Advertisment

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலானபத்தல பத்தல பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி கமல்ஹாசன் மீதும் புகாரும்அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான "போர்க்கண்ட சிங்கம்..." என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு விஷ்ணு எடவன் வரிகள் எழுத்து ரவி பாடியுள்ளார். பெற்ற மகனை தவிர தனது குடும்பத்தினரை இழந்த அப்பாவின் மனநிலையை பிரதிபலிக்கும் பாடல் வெளியாகியுள்ளது.இப்பாடல் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.