/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1004_0.jpg)
இயக்குநர்லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4ஆண்டுகளுக்குப்பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத்தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத்தெரிகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தின்வசூல் தமிழ்நாட்டில் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடித்த உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் படத்தின் மொத்த வசூல் 300 கோடியைதாண்டியுள்ள நிலையில் அதில் தமிழ்நாட்டில்மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிதுள்ளதாககூறப்படுகிறது. சமீபகாலமாக துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை விக்ரம் படம் தூக்கி நிறுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்துதெரிவிக்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)