kamalhaasan vikram movie  advertisement indian railways

‘மாஸ்டர்’ படத்தின்வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில்,அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளை நிறைவு செய்த படக்குழு, அடுத்தகட்ட பணியில் கவனம் செலுத்தி வருகிறது. விக்ரம் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertisment

இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழு விக்ரம் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், ஈரோடு செல்லும் ரயில் என்ஜினில் விக்ரம் படத்தின் விளம்பர போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதைப் போன்று கமலின் விக்ரம் படத்திற்கு ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மே 20 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisment