kamalhaasan tweet about vijayakanth health condition

Advertisment

நீரிழிவு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின்வலது காலில் உள்ள விரல்கள் அகற்றப்பட்டது. இது குறித்துஅக்கட்சியின் தலைமைவெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த் தற்போது நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின்ஆலோசனைப்படி தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்தது நடிகர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.